சுடச்சுட

    

    முதல்வர் பிறந்த நாள் : நாகையில் 2.03 லட்சம் மரக் கன்று நடத் திட்டம்

    By நாகப்பட்டினம்,  |   Published on : 13th September 2013 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக முதல்வரின் பிறந்தநாளையொட்டி, நாகை மாவட்டத்தில் 2,03,125 மரக்கன்றுகள் நடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் நாகை மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி.

    முதல்வர் பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகள் நடும் பணிக்காக நாகை ஆட்சியரகத்தில் வனத் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அவர் பேசியது:

    முதல்வரின் பிறந்த நாளையொட்டி, நாகை மாவட்டத்தில் 2,03,125 மரக்கன்றுகள் நடத் திட்டமிடப்பட்டு, வனத் துறை மூலம் நாற்றங்கால் உற்பத்தி செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

    தற்போது பெய்துவரும் பருவ மழையைப் பயன்படுத்தி, வேதாரண்யம் வட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்கூடங்கள், கோவில் வளாகங்களில் இதுவரை 1,500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

    வனத் துறை மூலம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள், அரசுத் துறை அலுவலக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில் துறை சார்ந்த நிறுவனங்களின் வளாகங்களில் வசதிக்கேற்ப நடவு செய்து, சிறப்பான பராமரிப்பை உறுதி செய்யும் வகையில் பணிகள் நடைபெற வேண்டும்.  நடவு செய்யப்படும் மரக்கன்றுகள் உரிய வகையில் பராமரிக்கப்படக் கூடிய வசதி கொண்ட இடங்களை அலுவலர்கள் உரிய ஆய்வு செய்து, மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும் என்றார் ஆட்சியர்.

    மாவட்ட வன அலுவலர் செ. மீனாட்சி, மாவட்ட வருவாய் அலுவலர் மு. ஆசியா மரியம், நாகை வருவாய்க் கோட்டாட்சியர் அ. சிவப்பிரியா, செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் அ. செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai