சுடச்சுட

    

    கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகை அவுரித் திடலில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது. கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்டெடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை அரசைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கட்சியின் மாவட்டச் செயலர் (பொ) கதிர்வளவன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலர்கள் கதிர்நிலவன், முகிலரசு, பிரபாகரன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்டத் துணைச் செயலர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநிலத் துணைப் பொதுச் செயலர் அரசு. வணங்காமுடி, முற்போக்கு மாணவர் கழக மாநிலச் செயலர் ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்டச் செயலர் வழக்குரைஞர் வேலு. குணவேந்தன், பொறியாளர் அணி மாநிலச் செயலர் செல்வராசு ஆகியோர் பேசினர்.

    கட்சி மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கட்சியின் நாகை நகரச் செயலர் மாதவன் நன்றி கூறினார்.

    திருவாரூரில்...  இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி, திருவாரூரில் வியாழக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.

    கட்சியின் மாவட்டச் செயலர் கோவி. தமிழழகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தெற்கு மாவட்டச் செயலர் என்.டி. இடிமுரசு, ஒன்றியச் செயலர் தங்க. தமிழ்ச்செல்வன், மகளிரணி மாநில துணைச் செயலர் அமுதா, நிர்வாகிகள் தமிழ்க்கதிர், கோவி. பாப்பையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai