Enable Javscript for better performance
வீடு புகுந்து சர்வேயரை தாக்க முயன்றவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வீடு புகுந்து சர்வேயரை தாக்க முயன்றவர் கைது

    By மன்னார்குடி  |   Published on : 13th September 2013 03:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடியில் நில அளவரை புதன்கிழமை வீடு புகுந்து தாக்க முயன்றதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

    புதிய வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வருபவர் நில அளவர் போஸ். இவர் மாநில நில அளவர் சங்கத் தலைவராகவும் உள்ளார். இவருக்கும் இதே பகுதியில் வசித்து, அண்மையில் திருநாகேஸ்வரத்துக்கு குடி சென்ற விவேகசிந்தன் மகன் தனசேகரனுக்கும் (28) முன்விரோதம் இருந்ததாம்.

    இந்நிலையில் புதன்கிழமை நடைபெற்ற திருமணத்துக்கு மன்னார்குடி வந்த தனசேகரன், பின்னர் போஸ் வீட்டுக்குச் சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டுத் தாக்க முயன்றாராம்.

    இதுகுறித்து மன்னார்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸார் புதன்கிழமை இரவு தனசேகரனைக் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai