Enable Javscript for better performance
குழந்தைகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் சாவு- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைகளைக் கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய் சாவு

    By வேதாரண்யம்,  |   Published on : 14th September 2013 03:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே தன்னுடைய 2 குழந்தைகளைக் கொன்று, தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தாய் வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தார்.

    வேதாரண்யத்தை அடுத்த கள்ளிமேடு கிராமத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மனைவி கனகவல்லி (29). இவரது மகள் கீர்த்தனா (5), மகன் ஸ்ரீராம் (2).

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிவசுப்பிரமணியன் இறந்துவிட்டார். இதையடுத்து, கூலி வேலை செய்து வந்த கனகவல்லி வறுமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கனகவல்லி தன்னுடைய வீட்டில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் குடித்தாராம்.

    தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் இருவரும் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர். கனகவல்லி தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை அவர் உயிரிழந்தார்.

    இதுகுறித்து வேட்டைக்காரனிருப்பு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai