சுடச்சுட

  

  திருமணமான மறுநாள் மணமகன் மர்மமான முறையில் இறந்தது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில், காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, நாகையை அடுத்த நாகூரில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

  நாகூர் ஆர்யநாட்டு தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ரா. ராஜதுரை (25). இவருக்கும், சாமந்தான்பேட்டை, அமிர்தாநகரைச் சேர்ந்த கு. ராஜஸ்ரீ என்பவருக்கும் கடந்த 2-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமண நாள் இரவு ராஜஸ்ரீ வீட்டில் தங்கியிருந்த ராஜதுரை, அங்கு மர்மமான முறையில் இறந்து கிடந்தது செப். 3-ம் தேதி தெரியவந்தது.

  இதுகுறித்து ராஜதுரையின் தந்தை ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், நாகூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  இந்த நிலையில், ராஜதுரையின் மர்மச் சாவு தொடர்பாக காவல் துறையினர் விரைவான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது உறவினர்கள் நாகூர், வாஞ்சூர் சோதனைச் சாவடி அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  நாகை காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கட்ராமன், வட்டாட்சியர் பரிமளம் ஆகியோர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பிரதே பரிசோதனையைத் தொடர்ந்து கிடைக்க வேண்டிய ரசாயன ஆய்வறிக்கை கிடைத்தப் பிறகு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து மறியலில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.

  மறியல் போராட்டத்தால், நாகை- காரைக்கால் வழித்தடத்தில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai