சுடச்சுட

  

  உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெறும் வன்முறைகளைத் தடுக்கக் கோரி, நாகை மாவட்ட தமுமுக சார்பில் நாகை புதிய பேருந்து நிலையம் முன் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  தமுமுக மாவட்டத் தலைவர் ஜபருல்லா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பரகத் அலி, மாவட்டப் பொருளாளர் சதகத்துல்லா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் செய்யது முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  மாநில மாணவரணி செயலாளர் டாக்டர் முகமது சர்வத்கான் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார்.

  தமுமுக மாவட்ட துணைத் தலைவர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட துணைச் செயலாளர்கள் இப்ராஹிம், செய்யது ரியாசுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர்கள் சாகுல் அமீது, ரபீக், ஷேக் மன்சூர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai