சுடச்சுட

    

    நாகையில் நகராட்சி அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

    By நாகப்பட்டினம்  |   Published on : 14th September 2013 03:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்நாடு நகராட்சி அலுவலர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகை நகராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நகராட்சியில் நிரந்தரம் செய்யப்பட்ட தினக்கூலி பணியாளர்கள் மற்றும் பதலி துப்புரவு தொழிலாளர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும். மூவர் குழு ஊதிய பரிந்துரையில் விடுபட்ட பதிவறை எழுத்தர், துப்புரவு பணி மேற்பார்வையாளர், ஒயர்மேன் அலுவலக உதவியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோருக்குத் தர ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

    நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். டெண்டர் மூலம் ஊழியர்களை நிரப்பும் முடிவைக் கைவிட வேண்டும். நகராட்சி, மாநகராட்சி குடிநீர் வழங்கும் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் வார விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சங்கத்தின் மண்டலச் செயலாளர் பாபுராஜ் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் சையது உசேன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.டி. அன்பழகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

    நகராட்சி அலுவலர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ராணி, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மண்டலச் செயலாளர் சித்ரா, சிஐடியு மாவட்டத் தலைவர் சீனி. மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai