Enable Javscript for better performance
நியாய விலை கடை பணியாளர்கள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    நியாய விலை கடை பணியாளர்கள் உண்ணாவிரதம்

    By நாகப்பட்டினம்  |   Published on : 14th September 2013 03:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில், நாகை அவுரித் திடலில் உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    பொது விநியோகத் திட்டப் பொருள்களை நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் முன்னிலையில் எடையிட்டு வழங்க வேண்டும். எடை குறைவைத் தவிர்க்கும் வகையில், அனைத்துப் பொருள்களையும் பொட்டலங்களில் வழங்க வேண்டும்.

    நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை கூட்டுறவுத் துறை நியாய விலைக் கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

    சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். அரசுப் பணியாளர் சங்க மாநில துணைத் தலைவர் சிவக்குமார் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கிவைத்துப் பேசினார்.

    சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் பிரகாஷ், அரசுப் பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் செல்வன், மாவட்டச் செயலாளர் கா. அன்பழகன், மாவட்ட அமைப்புச் செயலாளர் மகேந்திரன் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    நியாய விலைக் கடை பணியாளர் சங்க நிறுவனர் சுவாமிநாதன் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்துப் பேசினார். மாவட்டப் பொருளாளர் மோகன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai