Enable Javscript for better performance
மன்னார்குடியில் ஆற்றில் முழ்கி பள்ளி மாணவர் பலி- Dinamani

சுடச்சுட

    

    மன்னார்குடியில் ஆற்றில் முழ்கி பள்ளி மாணவர் பலி

    By மன்னார்குடி,  |   Published on : 14th September 2013 03:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : மன்னார்குடியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர் ஆற்றில் முழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

    ருக்மணிபாளையம், கோபிரளயம் சாலையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் தேவராஜன் (15). மேலவீதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் பாமணியாற்றில் மாதாகோவில்தெரு சட்ரஸ் பகுதியில் வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் முழ்கினாராம்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மன்னார்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் ஆர். கலியாமுர்த்தி உள்ளிட்டோர் அங்கு சென்று பல மணி நேரம் தேடி தேவராஜன் உடலை மீட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், மன்னார்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai