Enable Javscript for better performance
54 மனுக்களுக்கு உடனடித் தீர்வு- Dinamani

சுடச்சுட

    

    நாகை மாவட்ட ஓய்வூதியர் குறைதீர் கூட்டத்தில், ஓய்வூதியக் குறைகள் தொடர்பாக பெறப்பட்ட 54 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது.

    இந்தக் கூட்டம், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தலைமை வகித்தார். கூட்டம் தொடர்பாக, ஓய்வூதியர்களிடமிருந்து பெறப்பட்ட 68 மனுக்களில், 54 மனுக்கள் மீது உடனடித் தீர்வு காணப்பட்டது.

    ஓய்வூதியர்களின் முதுமை நிலையைக் கருத்தில் கொண்டு, அவர்களது குறைகளை கனிவுடன் பரிசீலினை செய்து அவர்களுக்கு சேர வேண்டிய நிதிப் பயன்கள் உடனுக்குடன் கிடைக்கச் செய்ய வேண்டும். இதனடிப்படையில், மீதமுள்ள 14 மனுக்கள் மீதான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

    ஓய்வூதியர் குடும்பப் பாதுகாப்பு நிதி மூலம், நாகை வெளிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெற்குத் தெருவைச் சேர்ந்த (ஓய்வூதியர் வாரிசு) து. கவியரசு என்பவருக்கு ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

    சென்னை, ஓய்வூதிய இணை இயக்குநர் பெ. தேவராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) எம். வெங்கட்ராமன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள், ஓய்வூதியர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai