சுடச்சுட

    

    தில்லையாடி உடற்கல்வி ஆசிரியருக்கு பாராட்டு

    By பொறையாறு  |   Published on : 15th September 2013 03:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியருக்கு அண்மையில சென்னையில் நடைபெற்ற விழாவில் பாராட்டுச் சான்றிதழும், விருதும்  வழங்கப்பட்டன.

    சென்னை டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அறக்கட்டளை சார்பில், 17-ம் ஆண்டு விருது வழங்கும்  விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் தில்லையாடி தியாகி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப்  பணியாற்றும் என். பிரபாகரனுக்கு அவரது சேவையை பாராட்டி உடற்கல்வி "ஜீவஜோதி' என்ற விருதும்,  பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய முன்னாள் தலைவர் ஆர். நடராஜ், அவருக்கு இவ் விருதை வழங்கினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai