Enable Javscript for better performance
வரதட்சிணை கொடுமை: கணவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வேதாரண்யம் அருகே வரதட்சிணைக் கேட்டு, மனைவியை கொடுமைப்படுத்தியதாக அவரது கணவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    நாகை மாவட்டம், வலிவலம், காளியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் ச. உமாராணி (29). வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி தெற்கு கிருஷ்ணப்பா மகன் சரவணக்குமார் (35). இவர்களது திருமணம் 2008-ல் நடைபெற்றது. இவர்களது மகன் ரூபேஷ் (3).இதனிடையே மகன் ரூபேஷுடன் சரவணக்குமாரும், தனது பெற்றோருடன் உமாராணியும் கடந்த 3 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்தனராம்.

    இந்நிலையில், வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உமாராணி அளித்த புகாரின் பேரில், சரவணக்குமார் மீது வரதட்சிணைக் கேட்டு கொடுமைப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து, அவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு, வேதாரண்யம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தப்பட்டார்.  அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி ஆர். லதா உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai