சுடச்சுட

  

  நாகையில் ஸ்ரீ சக்தி விநாயகர் குழு சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  விநாயகர் சதுர்த்தியையொட்டி, நாகை ஸ்ரீ சக்தி விநாயகர் குழு சார்பில் நாகை, வெளிப்பாளையம், கீழ்வேளூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சிவாலயங்கள் மற்றும் விநாயகர் கோவில்களில், 63 புதிய விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

  இந்தச் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீ செüந்தர்ராஜப் பெருமாள் கோவில் அருகே ஒருங்கிணைக்கப்பட்டு, ஊர்வலமாகக் கொண்டுச் செல்லப்பட்டன. இந்த ஊர்வலத்தில் 63 விநாயகர் சிலைகள் இடம் பெற்றிருந்தன.

  நாகை செüந்தர்ராஜப் பெருமாள் கோவிலிலிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்ற இந்த ஊர்வலம், நாகை புதிய கடற்கரையில் நிறைவடைந்தது. பின்னர், விநாயகர் சிலைகள் பைபர் படகுகள் மூலம் கடலுக்குள் கொண்டுச் செல்லப்பட்டுக்  கரைக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai