சுடச்சுட

    

    நாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் பிரமோத்சவ விழா செடில் உத்சவம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

    நாகை அக்கரைப்பேட்டை முத்துமாரியம்ன் கோவில் பிரமோத்சவ விழா கடந்த 7-ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.  பிரமோத்சவ விழாவையொட்டி, தினமும் வெவ்வேறு வாகனங்களில் அம்பாள், பரிவார மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

    முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான சமுத்திர பூஜை புதன்கிழமை நடைபெற்றது. தேர் திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

    பிரமோத்சவ விழாவின் பிரதான நிகழ்ச்சியான செடில் உத்சவம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

    அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் முன்புறம் (கிழக்கு வாசல்) அமைக்கப்பட்டிருந்த செடிலில், காத்தவராயன் வேடமணிந்து நின்றவர் குழந்தைகளை செடில் சுற்றி இறக்கிவிடும் பணியை மேற்கொண்டார்.

    அக்கரைப்பேட்டை, சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த திரளானோர், தங்கள் குழந்தைகளை செடில்

    சுற்றி நேர்த்திக் கடன் நிறைவேற்றினர். ஞாயிற்றுக்கிழமை மாலை தொடங்கிய இந்த நிகழ்ச்சி திங்கள்கிழமை அதிகாலை சுமார் 1 மணி வரை நடைபெற்றது.

    இதனிடையே  வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.  விழாவின் நிறைவாக மஞ்சள் விளையாட்டு, வங்கக் கடலில் தீர்த்தமளிக்கும் நிகழ்ச்சி,  கொடியிறக்கும் நிகழ்ச்சி ஆகியன திங்கள்கிழமை நடைபெற்றன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai