சுடச்சுட

    

    மயிலாடுதுறையில் கடந்த 2-ம் தேதி விடுதியிலிருந்து காணாமல் போன பள்ளி மாணவரை போலீஸார் திங்கள்கிழமை மீட்டனர்.

    மயிலாடுதுறையை அடுத்த டவுன் ஸ்டேசன் தெருவைச் சேர்ந்தவர் ராஜகோபால் மகன் கவியரசன் (15). இவர் மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் உள்ள ஆதிதிராவிடர் நலத் துறை மாணவர் விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2-ம் தேதி விடுதி வளாகத்தில் கிடந்த பழைய இரும்புக் கம்பிகளை கவியரசன் விற்க எடுத்துச் சென்றாராம்.

    இதை விடுதிக் காப்பாளர் ரெங்கநாதன் கண்டித்ததுடன், பெற்றோரை அழைத்து வருமாறும் கூறினாராம். இதையடுத்து கவியரசன் வீட்டுக்குச் செல்லவில்லை.

    இதுகுறித்து மாணவரின் தாய் கவிதா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த  புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

    இதில் அந்தப் பள்ளி மாணவர் சீர்காழி வட்டம், திருமுல்லைவாசல் கிராமத்தில் சுற்றித் திரிந்ததும்,அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் தஞ்சமிருந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீஸார் மாணவரை மீட்டு, அவரிடம் நடத்திய விசாரணையில் தாய் கண்டித்ததால் ஓடிப் போய் விட்டதாக அந்த மாணவர் தெரிவித்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai