தனியார் பள்ளிகளில் பயில உதவித் தொகை
By நாகப்பட்டினம், | Published on : 17th September 2013 02:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நாகையில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் 10 பேருக்கு, சிறந்த தனியார் பள்ளிகளில் கல்வி பயில உதவித் தொகை வழங்கப்பட்டது.
கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 10 மாணவ, மாணவிகளுக்கு, தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 பயில ரூ. 1.99 லட்சத்தில் காசோலைகளை வழங்கினார்.
மேலும், பணிக் காலத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 5 பேருக்கு கிராம உதவியாளர் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் கணினி இயக்குபவர், பணித் தொடர்பாளர், சமூகப் பணியாளர் பணிக்கான ஆணைகள் 3 பேருக்கு வழங்கப்பட்டன.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 242 மனுக்கள் நடவடிக்கைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர் மு. ஆசியாமரியம், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் எஸ். பொன்னையா, செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் அ. செந்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.