சுடச்சுட

    

    நீடாமங்கலம் அருகே ஞாயிற்றுக்கிழமை மொபெட்டில் சென்ற பெண்ணிடம் மூன்று பவுன் தங்க செயின் பறித்துச் செல்லப்பட்டது.

    நீடாமங்கலம் அருகேயுள்ள அனுமந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன் மனைவி ஜோதி (55). இவர் நீடாமங்கலத்தில் நடைபெற்ற விஷேசத்துக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது உறவினரான அ. வீரமணியோடு (42) மொபெட்டில் அனுமந்தபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    பழைய நீடாமங்கலத்தைத் தாண்டிச் சென்றபோது மோட்டார் சைக்கிளில் பின்னால் வந்த மர்ம நபர் ஜோதி அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்ததுடன், மொபெட்டையும் உதைத்துத் தள்ளி விட்டுச் சென்றாராம். பின்னர் வீரமணி மொபெட்டில் அவரை விரட்டிச் சென்றும் பயனில்லையாம்.  புகாரின் பேரில் நீடாமங்கலம் காவல் ஆய்வாளர் (பொ) நீலாவதி உதவி ஆய்வாளர் சுபத்ரா ஆகியோர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai