சுடச்சுட

    

    "அண்ணாவின் கனவை நிறைவேற்றுவது அதிமுக அரசு மட்டுமே

    By 'நாகப்பட்டினம்  |   Published on : 18th September 2013 04:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்கள் நலத் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தி, அண்ணாவின் கனவை நிறைவேற்றுவது அதிமுக அரசு மட்டுமே என்றார் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி.

    நாகை அவுரித் திடலில் அதிமுக சார்பில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற, முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது :

    இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படாத பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை 2 ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்படுத்தி, சாதனைப் படைத்துள்ளார் தமிழக முதல்வர்.

    மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற அடிப்படையில், கருவறை முதல் கல்லறை வரை மக்களுக்குப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, அந்தத் திட்டப் பயன்கள் குறித்த காலத்துக்குள் மக்களைச் சென்றடையச் செய்து அண்ணாவின் கனவை நிறைவேற்றும் அரசாக அதிமுக அரசு திகழ்கிறது என்றார் அமைச்சர் செந்தில்பாலாஜி. மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால் பேசும்போது, மக்களுக்குப் பயனளிக்கும் வகையில், மக்களின் மனதைப் புரிந்தே அனைத்துத் திட்டங்களும் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெற செய்யும் வகையில், கட்சியினர் பணியாற்ற வேண்டும் என்றார்.

    திரைப்பட நடிகை குயிலி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசினார். அதிமுக நாகை நகரச் செயலாளர் ஆர். சந்திரமோகன் தலைமை வகித்தார்.

    முன்னாள் அமைச்சர் ஆர். ஜீவானந்தம், அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் தங்க. கதிரவன், ராதாகிருஷ்ணன், நாகை சட்டப்பேரவைத் தொகுதி செயலாளர் ஆசைமணி மற்றும் அதிமுக மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai