சுடச்சுட

    

    "காவலர்கள் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும்'

    By நாகப்பட்டினம்  |   Published on : 18th September 2013 05:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதிதாகப் பொறுப்பேற்கும் காவலர்கள், கடமைத் தவறாமல், நேர்மையுடன் பணியாற்ற உறுதியேற்க வேண்டும் என்றார் காவல் துறை மத்திய மண்டல ஐ.ஜி மு. ராமசுப்பிரமணி.

    நாகை ஆயுதப்படை மைதானத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற, 138 பயிற்சிக் காவலர்களின் பயிற்சி நிறைவு விழாவில் அவர் பேசியது :

    இந்தியாவில் எந்த மாநில காவல் துறைக்கும் கிடைக்காத பெருமைகள் தமிழக காவல் துறைக்கு உண்டு. இந்தப் பெருமைகள், தமிழக காவல் துறையினரின் தியாகத்துக்குக் கிடைத்தச் சான்றுகள்.

    பயிற்சி முடித்தவர்களில் பலர் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ளவர்களாக உள்ளனர். தங்கள் பணியைக் கடமைத் தவறாமல், நேர்மையுடன் பணியாற்றும் காவலர்கள் அனைவரும், காவல் துறையில் உயர் பதவியை அடைய முடியும் என்றார் ஐ.ஜி மு. ராமசுப்பிரமணி.

    முன்னதாக, நாகை தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சியை நிறைவு செய்த 138 காவலர்களின் அணிவகுப்பை அவர் பார்வையிட்டு, ஏற்றார்.

    மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர். சிபிசக்ரவர்த்தி, காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் வெங்கட்ராமன், பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    10 பேருக்குச் சான்று: பயிற்சியில், சட்ட வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 4 பேருக்கும், கவாத்து வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 3 பேருக்கும்,  துப்பாக்கிச் சுடுவதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 3 பேருக்கும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன. நாகை தற்காலிகப் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்ற காவலர் எஸ். தனராஜ், அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பாக செயல்பட்டு, ஒட்டுமொத்த சிறந்த பயிற்சி காவலர் பட்டம் பெற்றார். இவர், மாநில அளவில் சிறந்த பயிற்சிக் காவலர்கள் பட்டியலில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai