சுடச்சுட

  

  ரிஷியூர் வீடு இடிப்பு வழக்கு தொடர்பாக நீடாமங்கலம் மாவட்ட உரிமையியியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சசிகலாவின் தம்பி திவாகரன் செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.

  திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள ரிஷியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சோம. தமிழார்வன். ஊராட்சியின் முன்னாள் தலைவர். இவரது கார் ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் மனைவி கஸ்தூரிக்கு சொந்தமான வீடு 2011, நவம்பர் 28-ல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

  இதுதொடர்பாக கஸ்தூரி, 2012, ஜனவரி 21-ல் திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார்.

  அதில், தனது வீடு இடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். நீடாமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து, சசிகலாவின் தம்பி திவாகரன் உள்ளிட்ட 9 பேரை 2012, ஜனவரி 25-ல் கைது செய்தனர்.

  இந்த வழக்கு நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக திவாகரன், பொக்லைன் இயந்திர உரிமையாளர் வீரசிவசங்கர் ஆகியோர் நீடாமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

  வழக்கில் தொடர்புடைய ரிஷியூர் ஊராட்சிமன்றத் தலைவர் கிருஷ்ணமேனன், தமிழ்ச்செல்வன், ராஜேந்திரன், வைத்தியநாதன், கணேசன், காந்தி (எ) குணசேகரன் ஆகிய 6 பேரும் ஆஜராகவில்லை. பொக்லைன் ஓட்டுநர் சக்தி, உடல்நிலையின் காரணமாக ஆஜராகவில்லை.

  இதையடுத்து, வழக்கு விசாரணையை அக்டோபர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி முருகன்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai