சுடச்சுட

    

    வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு

    By நீடாமங்கலம்  |   Published on : 18th September 2013 04:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து, 5 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருடி சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    வலங்கைமான் தெற்கு அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் அமிர்தவள்ளி (52). இவரது கணவர் வேதாசலம். இவர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி பணிக்காலத்தில் இறந்ததாக கூறப்படுகிறது. அமிர்தவள்ளி தனது மகன், மருமகளுடன் வசித்து வருகிறார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமிர்தவள்ளி தனது குடும்பத்தினருடன் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, திங்கள்கிழமை மீண்டும் வீட்டுக்கு வந்தார்.

    அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வலங்கைமான் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். இதில் வீட்டின் பீரோ, அலமாரியில் வைத்திருந்த 5 பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு போனது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai