Enable Javscript for better performance
2 குழந்தைகளுடன் தாய் தற்கொலைக்கு முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே குடும்பத் தகராறு காரணமாக திங்கள்கிழமை 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தாயும் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    வேதாரண்யம் அருகேயுள்ள அண்ணாப்பேட்டை கிராமம், ராஜன்கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (32). விவசாயக் கூலி. இவரது மனைவி இந்திரா(27). இவர்களுக்கு மகள் தீபிகா (5),மகன் சரண் (2) ஆகியோர் உள்ளனர்.

    இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக, திங்கள்கிழமை இரவு தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாம்.

    இதையடுத்து, வீட்டில் ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த விஷத்தை குழந்தைகள் தீபிகா, சரண் இருவருக்கும் கொடுத்துவிட்டு, இந்திராவும் குடித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர், மூவரையும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து வாய்மேடு காவல் நிலைய போலீஸார் விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai