சுடச்சுட

  

  அரசு மருத்துவமனையில்  நாகை ஆட்சியர் ஆய்வு

  By  நாகப்பட்டினம்,  |   Published on : 19th September 2013 10:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
   மகப்பேறு பிரிவு, தீவிரச் சிகிச்சைப் பிரிவு, காசநோய் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது, மருத்துவமனையைத் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க மருத்துவ அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
   பிறகு, சிகிச்சைக்கு வந்திருந்த பொதுமக்களிடம் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும், லஞ்சம் கேட்கப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். இதையடுத்து, நாகை நீலா மேலவீதியில் உள்ள நியாயவிலைக் கடையில் ஆட்சியர் ஆய்வு நடத்தினார். சமையல் எண்ணெய், சர்க்கரை, அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றின் இருப்புகளை சரிபார்த்து, இருப்பேடு மற்றும் பேரேடுகளை ஆய்வு செய்தார். நியாயவிலைக் கடை மூலம் வழங்கப்படும் உணவுப் பொருள்கள் உரிய எடையில் உள்ளதா, தட்டுப்பாடின்றி பொருள்கள் வழங்கப்படுகிறதா என்பது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்த ஆட்சியர், ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், தனக்கு தொலைபேசியில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai