சுடச்சுட

  

  உணவுப் பாதுகாப்பு தரச் சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு

  By  நாகப்பட்டினம்,  |   Published on : 19th September 2013 10:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை அ.து.ம மகளிர் கல்லூரி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில், கல்லூரியில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம்- 2006 குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   கல்லூரி முதல்வர் என். உதயகுமாரி தலைமை வகித்தார். நாகை மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் வி. செந்தில்குமார், நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஏ.டி. அன்பழகன் ஆகியோர் உணவுப் பாதுகாப்பு தரச்சட்டம் குறித்து விளக்கமளித்து, உணவுப் பொருள்களை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை குறித்து விளக்கினர். தமிழ்நாடு, புதுச்சேரி நுகர்வோர் கூட்டமைப்புக் குழுத் தலைவர் வழக்குரைஞர் எஸ். பாஷ்யம் நுகர்வோரின் உரிமைகளை விளக்கினார். உணவுப் பாதுகாப்பு குறித்த கேள்விகளுக்கு சரியான பதிலளித்த வணிகவியல் துறை முதலாம் ஆண்டு மாணவி பி. கார்த்திகாவுக்குப் பரிசு வழங்கப்பட்டது.
   உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் எம். ஆண்டனி பிரபு, ஆர்.எம். பிரவீன் ரகு, ஆர். மகாராஜன், ஏ. சதீஷ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் பங்கேற்றனர். வணிகவியல் துறைத் தலைவர் எஸ். மைதிலி வரவேற்றார். மாணவி வி. சிவதாரணி நன்றி கூறினார்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai