சுடச்சுட

    

    உலர்மீன் பாதுகாப்பு கொட்டகையில் தீ: ரூ. 1 லட்சம் சேதம்

    By  நாகப்பட்டினம்,  |   Published on : 19th September 2013 10:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகையில் உலர்மீன் பாதுகாப்புக் கொட்டகையில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட தீ விபத்தில் சுமார் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள உலர்மீன்கள் கருகி சேதமடைந்தன. நாகை, கீச்சாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆர். செல்வராஜ். நாகை நகர்மன்ற உறுப்பினரான இவருக்கு, அக்கரைப்பேட்டை உயர்நிலைப் பாலம் அருகே உலர்மீன் பாதுகாப்புக் கொட்டகை உள்ளது. இந்தக் கொட்டகையில் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென தீப்பற்றியது. இதில், அந்தக் கொட்டகையிலிருந்த உலர்மீன்கள் தீயில் கருகி சேதமடைந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ. ஒரு லட்சத்துக்கும் அதிகம் என கூறப்படுகிறது. நாகை தீயணைப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு, தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai