சுடச்சுட

    

    புதை சாக்கடை பணி: நாகை கோட்டை வாசல் போக்குவரத்துக்கு தடை

    By  நாகப்பட்டினம்  |   Published on : 19th September 2013 10:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதை சாக்கடை பணிகள் நடைபெறுவதையொட்டி, நாகை கோட்டை வாசல் பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார்.
     இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளது:
     நாகை நகராட்சியில் புதை சாக்கடை திட்ட பிரதான குழாய்கள் பதிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி, நாகை கோட்டைவாசல் - தேவி திரையரங்கம் வரை போக்குவரத்து
     முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
     இந்தத் தடை செப். 20-ம் தேதி முதல் அக். 31-ம் தேதி வரை அமலில் இருக்கும். போக்குவரத்துத் தடை அகற்றப்படும் வரையிலான காலத்தில், நாகை புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகள், கோட்டைவாசலிலிருந்து பழைய பேருந்து நிலையம் வழியாகக் கடற்கரை சாலையில் திருப்பி விடப்படும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai