சுடச்சுட

    

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கள்ளிமேடு கிராமத்தில் மத நல்லிணக்க விழாவாக நடைபெற்ற காதர் மீரான் தர்ஹா ஆண்டு கந்தூரி விழா புதன்கிழமை நிறைவடைந்தது.
     கள்ளிமேடு காதர் மீரான் தர்ஹாவின் விழாவையொட்டி, கடந்த 7-ம் தேதி தோப்புத்துறையிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
     இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு ரவ்லா ஷரிப்புக்கு சந்தனம் பூசும் விழா நடைபெற்றது.
     முன்னதாக தோப்புத்துறை எஸ். ஹபீபுல்லா குடும்பத்தினர், கள்ளிமேடு எஸ். ஆறுமுகம் பிள்ளை குடும்பத்தினர் இணைந்து வழக்கம்போல சந்தனகுடம் எடுத்து வந்தனர். பிறகு மத நல்லிணக்கத்துடன் சந்தனம் பூசப்பட்டது. விழாவில் பல்வேறு தரப்பு மக்கள் ஏராளமாகப் பங்கேற்றனர்.
     விழா ஏற்பாடுகளை நிர்வாகி பி. சாகுல்ஹமீது தலைமையிலான குழுவினர், தோப்புத்துறை, கள்ளிமேடு, தாமரைப்புலம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai