வேதாரண்யம் அருகே தகராறு: இருவர் கைது
By வேதாரண்யம், | Published on : 19th September 2013 10:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 2 இடங்களில் நடைபெற்ற வெவ்வேறு தகராறு சம்பவங்கள் தொடர்பாக 2 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தகட்டூர், ஆதியங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரெ. வீரசேகரன் (52) விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை வேலை செய்துள்ளனர்.
அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த சி. பாஸ்கரன் (31) தொழிலாளர்களிடம் பிரச்னை செய்தாராம். இதை தடுத்து கேட்ட வீரசேகரனை, பாஸ்கரன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வாய்மேடு போலீஸார் பாஸ்கரனை கைது செய்தனர்.
தாணிக்கோட்டகம் காமாட்சியம்மன் தெருவைச் சேர்ந்தவர் வ. கருணாநிதி (38). இவருக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்யப்போவதாக அதே பகுதியில் வசிக்கும் சொ. வைரக்கண்ணு (40) என்பவரிடம் கூறியிருந்தாராம்.
ஆனால், வேறு ஒருவரிடம் நிலத்தை கருணாநிதி விற்றுவிட்டதால், இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் வைரக்கண்ணு தாக்கியதில், தலையில் பலத்த காயமடைந்த கருணாநிதி திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த வாய்மேடு போலீஸார் வைரக்கண்ணுவை புதன்கிழமை கைது செய்தனர்.