சுடச்சுட

  

  திருவாவடுதுறை ஆதீனத்தில் நடராஜப் பெருமான் திருமஞ்சன விழா

  By மயிலாடுதுறை,  |   Published on : 20th September 2013 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்டம், திருவாவடுதுறை ஆதீனத்தில் ஆதீன  ஆன்மார்த்த மூர்த்திகள் அருள்மிகு ஞானமா நடராசப் பெருமான் புரட்டாசி வளர்ப்பிறை சதுர்தசி விழா (திருமஞ்சனம்) புதன்கிழமை நடைபெற்றது.

  விழாவையொட்டி ஆதீனத்தில் சிறப்பு வழிபாடு,சொற்பொழிவு,விருது வழங்குதல், நூல் வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  திருவாவடுதுறை ஆதீனம், 24-வது குருமகா சன்னிதானம்  சீர்வளர்சீர் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்படி நடைபெற்ற விழாவையொட்டி காலை நேர நிகழ்வாக சிறப்பு வழிபாடு, ஆக்ஞா பூசை,  மாகேசுவர பூஜைகள் நடைபெற்றன.

  தொடர்ந்து மாலை நேர நிகழ்வாக ஆதீ வேணுவனலிங்க விலாச அரங்கில்    திருமுறை, சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்றன.

  ஓதுவாருக்கு விருது: பின்னர் ஆதீன குருமுதல்வர் நமச்சிவாய மூர்த்திகள். ஞானமா  நடராசப் பெருமான் சன்னதிகளில் நடைபெற்ற வழிபாடுகளில் எழுந்தருளிய திருவாடுதுறை ஆதீன கர்த்தர் 24- குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிகப்  பரமாச்சாரிய சுவாமிகள்,கோவில்பட்டி பு. மகேஸ்வரன் ஓதுவாரின்  திருமுறைப் பணிகளைப் பாராட்டி, அவருக்கு பொன்னாடை, உருத்திராக்கம் அணிவித்து ரூ.5 ஆயிரத்திற்கான பொற்கிழி வழங்கி தெய்வத் தமிழிசைச் செல்வர் என்னும் விருதையும் வழங்கினார்.

  நிறைவாக திருமந்திரம் வைத்தியப் பகுதி என்னும் நூலை ஆதீனம் வெளியிட, ஆடுதுறை மகாத்மா காந்தி குழந்தை நலச் சங்கச் செயலர் கோ. சாம்பசிவம் பெற்றுக் கொண்டார்.

  நிகழ்ச்சிகளில் ஆதீனக் கட்டளை சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள், ஆதீனப் பணியாளர்கள், தமிழார்வலர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai