சுடச்சுட

    

    மணல் ஏற்றி வந்த 5 லாரிகள் நாகையில் சிறைபிடிப்பு

    By நாகப்பட்டினம்,  |   Published on : 20th September 2013 03:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெளி மாவட்டங்களிலிருந்து நாகைக்கு மணல் ஏற்றி வந்த 5 மணல் லாரிகள், நாகை லாரி உரிமையாளர் சங்கத்தினரால் வியாழக்கிழமை மாலை சிறைபிடிக்கப்பட்டன.

    நாகையில் சுமார் 200 லாரிகள் உரிய அங்கீகாரத்துடன் மணல் ஏற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவை நாகை மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மணல் குவாரிகளிலிருந்து மட்டுமே மணல் ஏற்றி, விநியோகித்து வருகின்றன.

    அண்மைக்காலமாக காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்வதற்காக பிற மாவட்டங்களிலிருந்து வரும் லாரிகள், தஞ்சாவூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்து மணல் ஏற்றி வந்து, நாகையில் நடைபெறும் சில கட்டடப் பணிகளுக்கு விநியோகிப்பதாகத் தெரிகிறது.

    நாகை மாவட்ட லாரிகள் பிற மாவட்ட மணல் குவாரிகளிலிருந்து மணல் ஏற்ற அனுமதிக்கப்படாத நிலையில், பிற மாவட்ட லாரிகளின் இத்தகைய நடவடிக்கை குறித்து நாகை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நாகை மாவட்ட ஆட்சியர்,  காவல் கண்காணிப்பாளரிடம் ஏற்கெனவே கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

    இந்நிலையில், தஞ்சாவூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்து மணல் ஏற்றிக் கொண்டு நாகைக்கு வந்த 5 லாரிகள் சிறைபிடிக்கப்பட்டு,  நாகை நகர காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. இது தொடர்பாக, நாகை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருடன் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் போலீஸார் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai