சுடச்சுட

  

  மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

  By மயிலாடுதுறை,  |   Published on : 20th September 2013 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தைக் கண்டித்து நாகை மாவட்ட உழைப்போர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு இயக்கத்தினர் வியாழக்கிழமை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, இயக்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ஆர். இளங்கோவன் தலைமை வகித்தார். சிபிஐஎம்எல் மயிலாடுதுறை வட்டச் செயலர் ஏ. லூர்துசாமி முன்னிலை வகித்தார்.

  மயிலாடுதுறை வட்டம், தருமதானபுரம் ஊராட்சி உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் முறைகேடுகளில் தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய  அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  வேலை உறுதித் திட்டம், குடிநீர், மின்விளக்கு போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு அதிகாரிகளால் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் நிதியை உடனே வழங்க வேண்டும்.

  ஊராட்சிகளில் நடைபெறும் பணிகள் குறித்து மக்கள் முன்னிலையில் சமூகத் தணிக்கை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

   மேலும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

  இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என். குணசேகரன், மாநில அமைப்பாளர் ஆர். முரளிதரன், விடுதலைச் சிறுத்தைகள் நாகை மாவட்டச் செயலர் (பொ) மு. பி. கதிர்வளவன்,தமிழ்நாடு மக்கள் கட்சியின் மாநில இணைச்செயலர் எழிலன் உள்ளிட்டோர் பேசினர்.

   கோடங்குடி,ஆத்துக்குடி,டவுன் ஸ்டேசன் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். எஸ். சிற்றரசு நன்றி  கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai