சுடச்சுட

    

    மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் கலசம் திருட்டு

    By மயிலாடுதுறை,  |   Published on : 20th September 2013 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மயிலாடுதுறை அபயாம்பிகை உடனுறை மாயூரநாதர் கோவிலில் தங்க முலாம் பூசப்பட்ட கோபுரக் கலசம் திருடு போனது வியாழக்கிழமை காலை தெரியவந்தது.

    திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான இக்கோவில், வழிபாட்டுக்காக தினந்தோறும் காலை 5 மணிக்கு திறக்கப்படுவது வழக்கம். காவலர் சுவாமிநாதன் வியாழக்கிழமை கோவிலைத் திறந்துள்ளார்.

    பின்னர் மெய்க்காப்பாளர் கலைவாசன் கோவிலின் உள்ளே சென்று பார்த்தபோது, அபயாம்பிகை சன்னதியின் தங்க முலாம் பூசப்பட்ட இரண்டரை அடி உயரம் சுமார் 20 கிலோ எடை கொண்ட கோபுரக் கலசம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து கோவிலின் உதவிக் கண்காணிப்பாளர் கணேசன் மயிலாடுதுறை போலீஸாருக்கு தகவல் அளித்தார்.

    இதையடுத்து நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் வந்த போலீஸார் நடத்திய ஆய்வில் கோவில் வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் கிடந்த கலசத்தின் 5 பாகங்கள் மீட்கப்பட்டன.

    மொத்தம் 11 பாகங்களைக் கொண்டது அக்கலசம். கைரேகைகள் பதியப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. 1-ம் நம்பர் புதுத்தெரு வரை சென்ற அந்த நாய் அங்குள்ள வீட்டின் முன் படுத்துக் கொண்டது.

    இதுகுறித்து கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி கூறியது:

    இந்தக் கலசத்தில் 200 கிராம் தங்க முலாம் பூசப்பட்டிருப்பதாகக் கோவில் கோப்புகளில் உள்ளது.

    கடந்த 2005-ல் நடைபெற்ற குடமுழுக்கின்போது மேலும் 15 கிராமில் தங்க முலாம் பூசப்பட்டது என்றார்.

    இந்தக் கோவிலை திருவாவடுதுறை ஆதீன கட்டளைத் சுப்பிரமணியத் தம்பிரான் சுவாமிகள், ஆதீன மேலாளர் சண்முகம், தேவஸ்தானக் கண்காணிப்பாளர் தெட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai