சுடச்சுட

    

    அரிச்சந்திரா நதியில் தண்ணீர் தேவை குறித்து ஆய்வு

    By வேதாரண்யம்,  |   Published on : 21st September 2013 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை, திருவாரூர் மாவட்டங்களில் காவிரி படுகை வெண்ணாறு பாசனப் பரப்பில் அரிச்சந்திரா நதி மூலம் பாசனம் பெறும் பகுதியில் தண்ணீர் தேவை குறித்து பொதுப் பணித் துறை உயர்நிலை அலுவலர்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

    அரிச்சந்திரா நதி மூலம் பாசனத்துக்கு நீர் வழங்கப்பட்டு வருவதை, தஞ்சாவூர் கீழ்க்காவிரி வடிநில வட்ட கண்காணிப்புப் பொறியாளர் சி. சம்பத், திருவாரூர் வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் பா. ரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். ற்

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பகுதியில் செல்லும் அரிச்சந்திரா நதியின் கடைமடை பகுதியான பிரிஞ்சுமுலை அணையைப் பார்வையிட்ட அவர்கள், தண்ணீர் தேவை குறித்து விவசாயிகள், அலுவலர்களிடம் கலந்தாய்வு செய்தனர்.தொடர்ந்து, மேலப்பிடாகை, வெண்மணச்சேரி, மணக்குடி, மணலி, முள்ளியாற்றின் பாசனப் பகுதியான திருத்துறைப்பூண்டி, விளக்குடி, நாட்டு வாய்க்கால் அணை, திருப்பத்தூர் பகுதிகளிலும் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின்போது, வெண்ணாறு வடிநில உபக்கோட்ட உதவிச் செயற்பொறியாளர் வி. ஆசைதம்பி (திருத்துறைப்பூண்டி), மாரிமுத்து (திருவாரூர்), உதவிப் பொறியாளர்கள் க. சண்முகம், ஜி.பி. மகேஷ்குமார், சிதம்பரநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai