சுடச்சுட

    

    கோரிக்கையை வலியுறுத்தி, நாகை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட செயலாக்கத்தில் நடைபெறும் முறைகேடுகளைக் கண்டித்தும், இத்திட்டத்தில் வேலை பெறும் தொழிலாளர்களுக்கு தினக்கூலியை முழுமையாக வழங்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இளைஞர் காங்கிரஸ் நாகை மக்களவைத் தொகுதித் தலைவர் ஆர்.என். அமிர்தராஜா தலைமை வகித்தார். நாகை சட்டப்பேரவைத் தொகுதி தலைவர் முகமது அலி முன்னிலை வகித்தார்.

    மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் நவ்ஷாத் பாபு, செயலாளர் அப்துல்காதர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai