சுடச்சுட

  

  நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை கண்டித்து, போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக ஆசிரியர்கள் சங்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

  நாகை மாவட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் முதுகலை ஆசிரியர்கள், தமிழாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்களை உள்ளடக்கிய ஆசிரியர்கள் சங்கக் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூட்டம், மயிலாடுதுறையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்திற்கு தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நாகை மாவட்டத் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார்.

  மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நாகை மாவட்டத் தலைவர் மதியழகன், உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் செல்வகணேசன், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ஆசிரியர்களை தரக்குறைவாக நடத்தும் நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு கண்டனம் தெரிவிப்பது. ஆசிரியர் தினவிழாவை புறக்கணிப்பது, நடைமுறைக்கு ஒவ்வாத கற்றல், கற்பித்தல் பணிகளை தன்னிச்சையாக செயல்படுத்துவதை நிறுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் கண்டித்து ஆர்ப்பாட்டம், ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்டப் பொருளாளர் முத்துக்குமார், தஞ்சை மண்டலச் செயலாளர் சிவகுருநாதன் உள்ளிட்டோர் பேசினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai