Enable Javscript for better performance
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது- Dinamani

சுடச்சுட

    

    காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது

    By மயிலாடுதுறை,  |   Published on : 21st September 2013 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    : இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது, காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என வலியுறுத்தி, பெரியார் திராவிடர் கழகத்தினர் தமிழகம் முழுவதும் பிரசாரப் பயணம் மேற்கொள்கின்றனர்.

    செப். 20 முதல் அக். 10 வரை நடைபெறவுள்ள பிரசாரப் பயணத் தொடக்க நிகழ்ச்சி மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    பெரியார் திராவிடர் கழகத்தின் நாகை மாவட்ட துணைத் தலைவர் ஆர். ரசீத்கான் தலைமை வகித்தார்.

    பிரசார பயணத்தை தொடக்கிவைத்து கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் பேசியது:

    மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட தென்ஆப்ரிக்கா, பாகிஸ்தான், உகண்டா போன்ற நாடுகள் சர்வதேச நாடுகளின் மாநாடுகளில் பங்கேற்கக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2009, மே மாதத்தில் 40 ஆயிரம் ஈழத்தழிழர்களை படுகொலை செய்த ராஜபட்ச சர்வதேச குற்றவாளியாக இருக்கும்போது, அந்நாட்டில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது. இதை வலியுறுத்தி மயிலாடுதுறையில் தொடங்கப்பட்டுள்ள பிரசாரப் பயணம் அக். 10-ம் தேதி சேலத்தில் நிறைவு பெறவுள்ளது என்றார்.

    முன்னதாக, பிரசாரச் செயலாளர் சிற்பி அரசு, துணைச் செயலாளர் விடுதலைஅரசு, தமிழர் உரிமை மீட்பு இயக்க மாநில அமைப்பாளர் இரா. முரளிதரன், தமிழ்தேசிய  இயக்கத் தலைவர் நாக. ரகுபதி, மதிமுக அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் என்.எஸ். அழகரி, நகரச் செயலாளர் டி. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.

    தொடர்ந்து சீர்காழி வட்டம், வைத்தீஸ்வரன்கோவிலில் கட்சியின் ஒன்றியத் தலைவர் பொன். தேவேந்திரன் தலைமையில் பிரசாரம் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai