சுடச்சுட

  

  தருமபுரம் ஆதீன கல்வி நிலையங்களில் ஆண்டு விழா

  By நாகப்பட்டினம்  |   Published on : 21st September 2013 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகை மாவட்டம், தருமபுரம் ஆதீன கல்வி நிலையங்களின் ஆண்டு விழா தருமபுரம் ஆதீன திருநெறிய தெய்வத் தமிழ் மன்றத்தில் அண்மையில் 3 நாள்கள் நடைபெற்றது.

  முதல் நாள் விழா சங்க இலக்கியத் திருநாளாகக் கொண்டாடப்பட்டது. பேராசிரியர்கள் முனைவர் க. சேகர், மு. நவமணி, சு. ஜெயலட்சுமி ஆகியோர் ஆற்றுப்படை நூல்கள், மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை ஆகியன குறித்துப் பேசினர்.

  இரண்டாம் நாள் விழா நீதி இலக்கியத் திருநாளாகக் கொண்டாடப்பட்டது. தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரி நூலகர் இரா. செல்வநாயகம், முனைவர் சு. சுப்புரத்தினம், சி. தேன்மொழி ஆகியோர் பழமொழி நானூறு, நாலடியார், திரிகடுகம் ஆகியவற்றை விளக்கிப் பேசினர்.

  மூன்றாம் நாள் விழா புராணத் திருநாளாகக் கொண்டாடப்பட்டது. முதல் நிகழ்ச்சியாக, ஸ்ரீ சொக்கநாதப் பெருமானுக்கு தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் முன்னிலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பிறகு, இந்து மத பாலபாடம் என்ற நூலை தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் வெளியிட்டார்.

  குடவாயில் பாலசுப்பிரமணியனுக்கு விருது: மாலை நிகழ்வில், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் மு. பாலசுப்பிரமணியனுக்கு, திருக்கோயிற்கலைச் செல்வர் என்ற விருதை ஆதீன குருமகா சந்நிதானம் வழங்கினார்.

  திருச்சி ஸ்ரீ மெüனமடத்தின் கட்டளைத் தம்பிரான் முனைவர் குமாரசாமி தம்பிரான், பட்டம் பெற்ற குடவாயில் மு. பாலசுப்பிரமணியனை அறிமுகப்படுத்தி பேசினார்.

  தருமபுரம் ஆதீன குருமகாசந்நிதானம் சீர்வளர்சீர் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் தனது ஆசியுரையில், வேலை செய்யாமல் கூலி பெறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை இறைவன் நமக்கு உணர்த்திய நாள் ஆவணி மூலத் திருநாள் என்றார். விருதுபெற்ற குடவாயில் மு. பாலசுப்பிரமணியன் ஏற்புரையாற்றினார். தருமபுரம் ஆதீன கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், தங்கள் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கையை வாசித்தனர்.

  திருக்கடவூர் கட்டளை விசாரணை ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் வரவேற்றார். தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரி முதல்வர் மா. திருநாவுக்கரசு நன்றி கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai