சுடச்சுட

  

  நாகையில் போக்குவரத்து கூட்டுத் தணிக்கை

  By நாகப்பட்டினம்,  |   Published on : 21st September 2013 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாகையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், போக்குவரத்து பிரிவு காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கூட்டுத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

  நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர். சிபிசக்ரவர்த்தி உத்தரவின் பேரில் இந்தத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அ. செல்வம், மோட்டார் வாகன ஆய்வாளர் கே. பிரபு, ரா. இளங்கோ மற்றும் காவல் துறை போக்குவரத்து ஒழுங்கு பிரிவு உதவி ஆய்வாளர், காவலர்கள் இந்தத் தணிக்கையை மேற்கொண்டனர்.

  போக்குவரத்து விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்ட வாகனங்களுக்கு இணக்கக் கட்டணம் விதித்து, வசூலிக்கும் பணி நடைபெற்றது. இதுபோன்ற கூட்டுத் தணிக்கை வருங்காலங்களில் தொடரும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தெரிவித்துள்ளது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai