சுடச்சுட

    

    அண்ணனை கத்தியால் குத்தி கொன்ற தம்பி தலைமறைவு

    By மயிலாடுதுறை  |   Published on : 22nd September 2013 01:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே குடும்பத் தகராறில் சனிக்கிழமை மாலை அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற தம்பியை போலீஸார் தேடி வருகின்றனர்.

    கீழகஞ்சாநகரம் பகுதியைச் சேர்ந்த தெட்சிணாமூர்த்தி மகன் மணி (எ) ராமச்சந்திரன் (50).  விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது சகோதரர் தெ. ராதாகிருஷ்ணன் (45). இருவரும் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வந்தனர். சனிக்கிழமை ராமச்சந்திரன் மனைவிக்கும், ராதாகிருஷ்ணண் மனைவிக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.

     இதனால் ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன், ராமச்சந்திரனை கத்தியால் குத்தினார். இதில் பலத்தக் காயமடைந்த ராமச்சந்திரன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.  இதுகுறித்து செம்பனார்கோவில் போலீஸார் வழக்குப் பதிந்து,  ராதாகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai