சுடச்சுட

  

  ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

  By நாகப்பட்டினம்  |   Published on : 22nd September 2013 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஓய்வூதிய முறையை மாற்றக் கோரி,  தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாகை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து,  பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் எம்.என். பக்கிரிசாமி தலைமை வகித்தார்.

  ஓய்வு பெற்ற பள்ளி - கல்லூரி ஆசிரியர்கள் சங்க மாவட்டத் தலைவர் ந. காவியன், ஓய்வு பெற்ற மின் ஊழியர் நல அமைப்பு கோட்டத் தலைவர் ஆர். திருநாவுக்கரசு, ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  ஓய்வு பெற்ற பள்ளி - கல்லூரி ஆசிரியர்கள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் மு. அருணாச்சலம், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.டி. அன்பழகன், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ஆ. நடராசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் து. கணேசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, நிறைவுரையாற்றினார். சங்கத்தின் மாவட்டச் செயலர் சொ. கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai