சுடச்சுட

  

  : காரைக்கால் அருகே உதவி செவிலியரிடம் ஆபாசமாகப் பேசி மிரட்டி, பணம் பறிக்க முயன்ற மூவர் சிறையில் உள்ளனர். இவர்கள் அடுத்த 2 மாதங்களுக்கு காரைக்கால் மாவட்டத்தில்  நுழைய மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

  காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதி நல்லம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி செவிலியராகப் பணியாற்றுபவர் ரோஸ்லின்மேரி.  இவரது கைப்பேசியில் இருவேறு எண்களில் சிலர் ஆபாசமாக பேசி வந்துள்ளனர். ஒருகட்டத்தில் அவரை மிரட்டி ரூ. 15 ஆயிரம் வேண்டுமெனக் கூறியுள்ளனர்.

  இதுகுறித்து ரோஸ்லின்மேரி திருநள்ளாறு காவல் நிலையத்தில் கடந்த 12-ம் தேதி புகார் தெரிவித்தார். விசாரணையில், காரைக்கால் திரௌபதியம்மன் கோயில் தெரு அமிர்தலிங்கம் (28), வலத்தெரு வசந்த் (28), காட்டுநாயகன் தெரு சுந்தர் (எ) சதீஷ் (26)  மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.

  சிறையில் உள்ள மூவரும் வெளியில் வந்தால், பெண்களுக்கு மேலும் சிரமம் ஏற்பட வாய்ப்புண்டு. இவர்கள் குறிப்பிட்ட காலம் காரைக்கால் மாவட்டத்தினுள் நுழையத் தடை விதிக்கவேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு திருநள்ளாறு காவல்நிலைய அதிகாரி பரிந்துரைத்திருந்தார்.

  இதனை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் (பொ) அ. முத்தம்மா, இம்மூவரும் செப். 20 முதல் நவ. 18-ம் தேதி வரை காரைக்கால் மாவட்டத்தினுள் நுழையத் தடை விதித்து வெள்ளிக்கிழமை ஆணை பிறப்பித்தார். 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai