சுடச்சுட

    

    பள்ளி மாணவர்களுக்கிடையேயான  ஓவியம் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி  மயிலாடுதுறையில் அண்மையில் நடைபெற்றது.

    மாயூரம் லயன்ஸ் சங்கம், சக்தி கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்திய இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சக்தி அறக்கட்டளையின் கீழ் இயங்கும் வள்ளலார் மாணவர் விடுதி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு அறக்கட்டளை நிறுவனர் நல்லாசிரியர்  எஸ். சிங்காரவேலு தலைமை வகித்தார். லயன்ஸ் சங்க முன்னாள் நிர்வாகி ரெங்கநாதன் முன்னிலை  வகித்தார்.

    டிபிடிஆர் தேசிய மேல்நிலைப் பள்ளி, தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளி, செயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 20-க்கு மேற்பட்ட மாணவர்கள்  பங்கேற்றனர். போட்டியின் நடுவராக தமிழாசிரியர் ஞானசேகரன்  செயல்பட்டார். போட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள்  வழங்கப்பட்டன.

    விழாவில் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    சக்தி அறக்கட்டளைச் செயலர் எஸ். தேன்மொழி  வரவேற்றார். அறக்கட்டளை இயக்குநர் அபிநயா நன்றி கூறினார்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai