சுடச்சுட

  

  நரேந்திர மோடியால் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது

  By சீர்காழி,  |   Published on : 22nd September 2013 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்ததன் காரணமாக, பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது என்று முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், திரைப்பட நடிகருமான எஸ்.வி. சேகர் தெரிவித்தார்.

  நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள வைத்தியநாதசுவாமி உடனாய தையல்நாயகி அம்பாள் கோயிலில் நடிகர் எஸ்.வி. சேகர் தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை வழிபாடு மேற்கொண்டார்.

  பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

  வைத்தீஸ்வரன்கோவிலின் உள்ளே 2 இடங்களில் மேல்தளம் இடிந்து விழுந்திருப்பது, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்தக் கோயிலின் பராமரிப்புப் பணியை தருமபுரம் ஆதீனம் விரைவாக தொடங்க வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பு.

  நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருப்பதால், பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்பது உறுதி. மத்தியில் காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து மாற்றுக் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடையே மேலோங்கியிருப்பது பாஜகவுக்கு கூடுதல் பலம்.

  நரேந்திர மோடி சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்ற பிரசாரத்தை வைத்து பாஜகவை வீழ்த்த முடியாது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் பல மதக் கலவரங்கள் நடைபெற்றுள்ளன என்பதை அனைவரும் அறிவர்.

  குஜராத்தில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் நரேந்திர மோடியைத் தான் ஆதரிக்கின்றனர் என்பதே உண்மை.

  இந்தியாவின் மொத்த வாக்காளர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே அரசியல் கட்சி சார்ந்தவர்கள். மீதமுள்ள 70 சதவீதம் பேர் எந்தக் கட்சியும் சாராதவர்கள். இதில், சுமார் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் இளைஞர்கள். இளைஞர்களின் விருப்பம் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்பதாகவே உள்ளது. இதன்மூலம் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. பாஜகவுக்கு வெற்றி உறுதி என்றார் எஸ்.வி. சேகர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai