சுடச்சுட

    

    பள்ளிகளுக்கு வழங்கிய மானியத்தை திரும்ப கேட்பதற்கு எதிர்ப்பு

    By வேதாரண்யம்  |   Published on : 22nd September 2013 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு மானியம் அளிக்கப்பட்டதில், காரணம் கூறாமல் குறிப்பிட்ட தொகையைத் திரும்பச் செலுத்தக்கோரும் ஆணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    நாகை மாவட்டம்,வேதாரண்யத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் இரா. சரவணன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலர் நா. சொக்கலிங்கம்,மாவட்டச் செயலர் வை.ப. பார்த்தசாரதி,வட்டாரச் செயலர் ஆ.பா. தர்மதுரை உள்ளிட்டோர் பேசினர்.

    கூட்டத்தில் அமைப்பின் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செப். 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் பேரணியில் கூடுதலான ஆசிரியர்கள் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai