சுடச்சுட

    

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே மீனவரைக் கொலை செய்ததாக 2 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    புஷ்பவனம் கூவாலித்தெரு பகுதியைச் சேர்ந்த பக்கிரிசாமி மகள் சுஹாசினி (22), மகன் தனிஷ்கொடி (20). அதே பகுதியைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளியான அ. ரவிச்சந்திரன் 38), பக்கிரிசாமியின் தங்கை மலர்க்கொடியின் கணவராவார். அவரது மகன் சங்கர் (21).வேதாரண்யத்தில் ஒரு தனியார் கடையில் சுஹாசினி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், வேலைக்குச் செல்லும்போது, அதே பகுதியைச் சேர்ந்த ரெத்தினம் மகன் சுந்தரராஜன் (28), சுஹாசினியை சைக்கிளில் ஏற்றிச் செல்வாராம். இதனால், சங்கருக்கும், சுந்தரராஜனுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஊர்ப் பஞ்சாயத்தார்களிடம் சங்கரின் தந்தை ரவிச்சந்திரன் புகார் தெரிவித்ததையடுத்து, அங்குள்ள மகா மாரியம்மன் கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஊர்ப் பஞ்சாயத்து கூடியுள்ளது.

    இதில், தனிஷ்கொடி பங்கேற்காத நிலையில் சுந்தரராஜன் மட்டும் பங்கேற்றுள்ளார். இதில் பஞ்சாயத்தார் சுந்தரராஜனை கண்டித்துள்ளனர். பஞ்சாயத்து முடிந்து வீடு திரும்பிய ரவிச்சந்திரனை, தனிஷ்கொடி, சுந்தரராஜன் இருவரும் சேர்ந்து கத்தியால் குத்தினர். இதில் பலத்தக் காயமடைந்த ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து வேதாரண்யம் போலீஸார் வழக்குப் பதிந்து, தனிஷ்கொடி, சுந்தரராஜன் இருவரையும் கைது செய்தனர். மேலும், இதுதொடர்பான தகராறில் காயமடைந்த தனிஷ்கொடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai