சுடச்சுட

    

    நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே அண்ணனைக் கத்தியால் குத்திக் கொலை செய்த தம்பி மற்றும் அவரது மனைவி ஆகியோரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

    செம்பனார்கோவிலை  அடுத்த கீழ கஞ்சாநகரம் கிராமத்தைச் சேர்ந்த தெட்சிணாமூர்த்தி மகன்கள் ராமச்சந்திரன் (50), ராதாகிருஷ்ணன் (45). இருவரும் கூலித் தொழிலாளிகள். ராமச்சந்திரனின் மனைவி வளர்மதிக்கும், ராதாகிருஷ்ணனின் மனைவி பஞ்சவர்ணத்துக்கும் (40) அடிக்கடி தகராறு ஏற்படுமாம். சனிக்கிழமை ஏற்பட்ட தகராறின்போது, ஆத்திரமடைந்த ராதாகிருஷ்ணன் கத்தியால் ராமச்சந்திரனை குத்தினார்.

    இதில் பலத்தக் காயமடைந்த ராமச்சந்திரன் மயிலாடுதுறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். செம்பனார்கோவில் போலீஸார் வழக்குப் பதிந்து, ராதாகிருஷ்ணன், பஞ்சவர்ணம் ஆகியோரை கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai