சுடச்சுட

  

  நாகை மாவட்டம், வேதாரண்யம் கடற்கரை பகுதியில் உலக கடற்கரை தூய்மைதினத்தையொட்டி சனிக்கிழமை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டவர்கள், அது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.

  ஆறுகாட்டுத்துறை கடற்கரையில் நடந்த தூய்மைப் பணியில் இந்திய கடற்படை வீரர்கள், கடலோரக் காவல் குழுமம், ஆறுகாட்டுத்துறை அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், மீனவக் கிராமத்தினர் பங்கேற்றனர்.

  பின்னர், கடற்கரை தூய்மையை பாதுகாப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

  தொடர்ந்து, விழிப்புணர்வுக்காக தூய்மையின் அவசியம் குறித்து மீனவர்களிடையே முழக்கமிட்டு பிரசாரம் செய்தனர். இதேபோல, கோடியக்கரை கடற்கரையில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai