சுடச்சுட

    

    நாகூர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி,உணவுத் திருவிழா

    By நாகப்பட்டினம்  |   Published on : 23rd September 2013 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகூர் கிரசண்ட் மெட்ரிக் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா அண்மையில் நடைபெற்றது.

    நாகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மா. ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

    பின்னர், 8 தலைப்புகளின் கீழ் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மாணவிகளின் அறிவியல் படைப்புகளை அவர் பார்வையிட்டார். அப்போது, மாணவிகள் தங்கள் படைப்புகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.

    அ.து.ம மகளிர் கல்லூரிப் பேராசிரியர் ரேணுகா, அக்கரைப்பேட்டை அரசுப் பள்ளி ஆசிரியர் பசுபதி, நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் பி. மகேஷ் ஆகியோர் மாணவிகளின் படைப்புகளுக்கு மதிப்பெண் அளித்து, பரிசுக்குரியவர்களை தேர்வு செய்தனர்.

    உணவுத் திருவிழா

    இதைத் தொடர்ந்து நடைபெற்ற உணவுத் திருவிழாவை மாவட்ட வருவாய் அலுவலர் மு. ஆசியா மரியம் தொடங்கிவைத்துப் பேசினார்.

    அறுசுவை அரங்கம் என்ற தலைப்பில், 6 அரங்கங்களில் புரதம், கார்போ ஹைட்ரேட், தாது உப்புகள், கொழுப்புச் சத்து, வைட்டமின், நார்ச்சத்து என 6 வகை சத்துகள் நிறைந்த உணவுகள் வைக்கப்பட்டிருந்தன.  சர் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் செயலர் டி. மகேஸ்வரன், பிரைம் கல்வி குழுமங்களின் இயக்குநர் ராமதாஸ், நாகை ஹெர்போகேர் மருத்துவ ஆலோசனை மைய நிர்வாகி பி.கே. நிர்மல் குமார் ஆகியோர் உணவுகளை சுவைத்து, பரிசுக்குரிய மாணவிகளைத் தேர்வு செய்தனர்.     பின்னர், நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தாசிம் பீவி அப்துல் காதர் கல்லூரி முதல்வர் சுமையா பங்கேற்று, சிறந்த அறிவியல்  படைப்புகள் மற்றும் சிறந்த உணவைத் தயாரித்த மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai