சுடச்சுட

    

    தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியத்தின், நாகை மாவட்ட  செயற்குழுக் கூட்டம் தரங்கம்பாடியில் சனிக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் நூலகர் இரா. அமிர்தலிங்கம் தலைமை வகித்தார். சங்கப் புரவலர் சா. குலோத்துங்கன் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    நூலகர்களின் தர ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். கிராமப்புற நூலகர்களுக்கு சிறப்பு  காலமுறை ஊதியத்தை மாற்றி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    நூலகர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் பொறுப்புகளை ரத்து செய்ய வேண்டும். பத்து ஆண்டுகளுக்குமேல் பணிபுரியும் துப்புரவுப்  பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம்  வழங்கப்பட வேண்டும்.

    காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப  வேண்டும். நூலகர்களுக்கு வழங்கப்படும் ஊதிய வேறுபாட்டை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை அலுவலர் ஒன்றியத்தின் நாகை மாவட்டச் செயலர் பெ. ரவிச்சந்திரன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள், நூலகர்கள் கலந்து கொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai