Enable Javscript for better performance
\\\"பெண்களை மையப்படுத்தியே அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன\\\'- Dinamani

சுடச்சுட

    

    "பெண்களை மையப்படுத்தியே அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன'

    By மயிலாடுதுறை,  |   Published on : 23rd September 2013 01:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் பெண்களை பொருளாதாரத்தில் உயர்த்தும் நோக்கில், அவர்களை மையப்படுத்தியே செயல்படுத்தப்படுகின்றன என்றார் மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ. ஜெயபால்.

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் செயல்படும் புதுவாழ்வுத் திட்டத்தின் மூலம் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்புகளுக்கு பெருங்கடன், சுய உதவிக் குழுவினர்களுக்கு நேரடிக் கடன், கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு கூடுதல் நிதி, மகளிர் சுய உதவிக் குழுக்களைச்  சேர்ந்தவர்களுக்கு தனிநபர் அடையாள அட்டை, தொழிற்திறன் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு சான்று வழங்குதல் ஆகிய ஐம்பெரும் விழா மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    இவ்விழாவில் அமைச்சர் கே.ஏ. ஜெயபால் பங்கேற்று, புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ் நாகை மாவட்டத்தில் உள்ள 750 மகளிர் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு ரூ. 11.70 கோடி பொருளாதார மேம்பாடு கடன்களை வழங்கி அவர் மேலும் பேசியது:

    நாகை மாவட்டத்தில் உள்ள மகளிர் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு இதுவரை ரூ. 147 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.  புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ், 14 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, வேலை வாங்கித் தரப்பட்டுள்ளது. அரசு வழங்கும் உதவியை மகளிர் குழுவைச் சேர்ந்தவர்கள் முறையாகப் பயன்படுத்தி பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    விழாவுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் து.  முனுசாமி தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம். சக்தி (சீர்காழி), என்.வி. காமராஜ் (வேதாரண்யம்), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஏ.கே. சந்திரசேகரன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.

    விழாவில் மயிலாடுதுறை சார் ஆட்சியர் எஸ். திவ்யபிரியதர்ஷினி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பா. சந்தோஷ்குமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மேலாளர் பி. பத்மகுமார் ஆகியோர் பேசினர்.

    இதில் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் இ. தமிழரசி, ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் என். மனோகரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் வி. பழனிச்சாமி, மாயூரம் கூட்டுறவு வங்கித் தலைவர் என். கிருஷ்ணமூர்த்தி, வட்டாட்சியர் கலைச்செல்வி மற்றும் புதுவாழ்வுத் திட்ட அலுவலர்கள், அரசு அலவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மகளிர் குழுவினர் பங்கேற்றனர். முன்னதாக, புதுவாழ்வுத் திட்ட மாவட்ட அலுவலர் ம. ஜெய்கணேஷ் வரவேற்றார். உதவித் திட்ட மேலாளர்

    ஜெ. சண்முகவடிவு நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai